Sunday, 18 May 2014

ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் 

பிரேம் நகர் 



நமது பேரன்புமிகு பப்பா சுவாமி ராம்தாஸ், பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய், பூஜ்ய சுவாமி சச்சிதானந்தாஜி ஆகியோரின் பெரும் கருணையினால் காஞ்சிபுரம் போகும் வழியில் படப்பை என்னும் இடத்தில ஆகஸ்ட் மாதம் 2006 - ஆம் ஆண்டு ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக  பிரேம் நகர் உதயமானது.  உலகளாவிய அன்பும் சேவையும் பிரேம் நகரின் முக்கிய நோக்கமாகும்.

கேரளத்திலுள்ள ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்று ராம நாம பேரின்பத்தில் திளைக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், பல்வேறு பொறுப்புகளின் காரணமாக, பல அன்பர்களால் ஆஸ்ரமத்திற்கு விரும்பிய போதெல்லாம் செல்ல முடிவதில்லை. பக்தர்களின் இந்த ஏக்கத்தைத் தீர்க்கவே  பேரன்புமிகு பப்பா, பூஜ்ய மாதாஜி, பூஜ்ய சுவாமிஜி ஆகியோர் மிகுந்த அன்புடன் நமக்கு சென்னை ஆனந்தாஸ்ரம் சத்சங் சமிதி சார்பாக பிரேம் நகரை அருளியுள்ளர்கள்.  தினசரி நிகழ்ச்சிகளாக பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் அன்பர்களுக்குப் பயனுள்ள வகையில் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இங்கு மாதந் தோறும் முதல் ஞாயிறன்று அகண்ட ராம நாம பஜனை மற்றும் சத்சங்கம்  காலை 7.௦௦ மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்று வருகிறது.  ஆனந்தாஸ்ரமத்தில் நடைபெறும் ஒன்பது சிறப்பு நாட்களையும் பக்தர்கள் இங்குக் கூடி கொண்டாடுகிறார்கள்.

பிரேம் நகரில் உள்ள காற்றோட்டம் மிக்க விசாலமான பஜனை ஹாலில் 13 கோடி ராம நாமக்கள் பிரதிஷ்ட்டை செய்யப் பட்டுள்ள மேடையில் பப்பா மாதாஜி சுவாமிஜி அருள் மழைப் பொழிகிறார்கள்.

எப்பொழுதும் இறை நிகழ்ச்சிகளும் "ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்" என்ற நாம பஜனையும் இடையறாது நடைபெற்று வருவதால் பிரேம் நகரில் ஒரு புனிதமான அமைதி நிலவுவதையும், ஆன்மீக அதிர்வலைகளின் சான்னித்தியம்   திகழ்வதையும் உணர முடிகிறது. 

No comments:

Post a Comment