Friday, 13 June 2014

நானொழிந்து நீயாக

நானொழிந்து நீயாக வேண்டு மையா
நாதாந்த துய்யனே வேதாந்த மெய்யனே  
தானாகி நின்றதை பிரம்மமென்று கூறுவார்
பிரம்மமாகி நிற்பதே நீயென்று கூறுவேன்

மானாடும் மயிலாடும் ஆட்டத்திற் களவுண்டு
மனமாடும்  ஆட்டத்திற் களவே யில்லை 
அளவில்லா ஆட்டத்தால் அகிலத்தில் அலைகின்றேன்
அரும்பாடு பட்டும் உள்ளே அமைதியில்லை

அமைதியில்லா வாழ்வு அடியேனுக் கெதற்காக
அழித்துவிடு எந்தன் ஆணவத்தை
ஆணவம் அழிந்தால்தான் அறியமுடியும் உன்னை

அண்டி வந்தேன்ஞான ஆனந்த வள்ளலே

No comments:

Post a Comment